பாரீஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த மாதம் 26-ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்து 714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
தற்போது வரை போட்டிகளின் முடிவில் 39 தங்கம், 27 வெள்ளி மற்றும் 24 வெண்கலம் என 90 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து 38 தங்கம் உட்பட 122 பதக்கங்களுடன் அமெரிக்கா 2-வது இடத்திலும் உள்ளது. பதக்க பட்டியலில் முதலிடத்தை பெற இவ்விரு அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இதில் இந்தியாவுக்கு 6 பதக்கங்கள் கிடைத்தன. நிறைவு விழாவில் இந்தியா சார்பாக மனு பாக்கரும், ஸ்ரீஜேஷும் தேசிய கொடியை ஏந்தி செல்லவுள்ளனர்.