கேரளாவில் நடைபெறவிருந்த பிரமோஷன் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ள தங்கலான் படக்குழு, அந்த தொகையை கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
தங்கலான் திரைப்படம் வரும் 15-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளதால், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பிரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வயநாடு நிலச்சரிவை கருத்தில் கொண்டு, கேரளாவில் நேற்று நடைபெறவிருந்த பிரமோஷன் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ள படக்குழு, அந்த தொகையை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கவுள்ளது.