சுதந்திர ஒட்டம் போன்ற நிகழ்வுகளில் மக்கள் பங்கேற்பது வரவேற்கக் கூடியது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகரில் சுதந்திர ஓட்டம் என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தாம் மக்களின் ஆற்றலை உணர்வதாகவும், அந்த ஆற்றலே தம்மை உயர்த்துவதாகவும் தெரிவித்தார். சுதந்திர ஓட்டம் என்பது நமது கனவு எனக்கூறிய அவர், அந்த கனவு உலகை வழிநடத்தி செல்லும் என குறிப்பிட்டார். மேலும், நாட்டின் எதிர்காலம் இளைஞர் கையில் உள்ளது என குறிப்பிட்டார்.