சர்தார் சரோவர் அணையில் இருந்து நர்மதை ஆற்றில் விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டம் கெவாடியா பகுதியில் உள்ள சர்தார் சரோவர் அணை நிரம்பியதையடுத்து, அதன் ஐந்து மதகுளில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் நர்மதை ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
இதையொட்டி, நர்மதை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்குவதற்கு ஏதுவாக நிவாரண முகாம்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.