பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட பிரேக்கிங் டான்ஸ் பிரிவில், ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு ஆதரவான வாசகம் பொறித்த மேலங்கி அணிந்த அந்நாட்டு பெண் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
ஆப்கானிஸ்தானில் வன்முறையை கட்டவிழ்த்து ஆட்சியைப் பிடித்த தலிபான்கள், பெண்களுக்கு எதிராக அடக்குமுறையைக் கையாண்டனர். இதனால் பெண்களை விடுவிக்கக் கோரி, ஆப்கானிஸ்தானை சேர்ந்த மணீஷா தலாஷ் என்ற பெண், பிரேக்கிங் டான்சின் ப்ரீ- குவாலிஃபயர் என்ற முன்-தகுதி சுற்றில், மேலங்கி அணிந்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியால் மணீஷா தலாஷ் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.