நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள திருமணிமுத்தாறு ஆற்றில் ரசாயன நுரையுடன் தண்ணீர் செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலையில் இருந்து துவங்கும் திருமணிமுத்தாறு நாமக்கல் மாவட்டம் வழியாக காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக திருமணிமுத்தாறு ஆற்றில் ரசாயன நுரையுடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருமணிமுத்தாற்றில் சாக்கடை மற்றும் சாய கழிவுகள் கலந்துள்ளதால் அதிகளவு துர்நாற்றத்துடன் கருப்பு நிறத்தில் தண்ணீர் செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.