தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஸ்ரீ பச்சையம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்த கோவிலில் கடந்த ஒன்பதாம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கரகம் எடுத்தல் மற்றும் தேர் ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கரியம்பட்டி கோவிலில் தொடங்கிய ஊர்வலம், பென்னாகரம் கடைவீதி வழியாக, ஸ்ரீமாதேஸ்வரன் கோவில் வரை நடைபெற்றது. வாண வேடிக்கைகள், பம்பை மேளதாளங்களுடன் திரளன பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.
தொடர்ந்து, ஸ்ரீபச்சையம்மன் மற்றும் புள்ள முனியப்பன் சுவாமிக்கும், சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.