விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெறும் 3ம் கட்ட அகழாய்வில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த அகழாய்வில் சுடுமண்ணால் ஆன வடித்தட்டு, புகைப்பிடிப்பான் கருவி மாவுக், கல்லால் ஆன கழுத்தில் அணியக்கூடிய தொங்கணி உள்ளிட்ட ஆயிரத்து 250க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.