திருச்சியில் இருந்து அபுதாபிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் புதிய விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், இண்டிகோ நிறுவனம் சார்பில் திருச்சியில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறுக்கிழமை ஆகிய நாட்களில் திருச்சியில் இருந்து அபுதாபிக்கு இண்டிகோ விமானம் இயக்கப்படவுள்ள நிலையில், அபுதாபியில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்திற்கு வாட்டர் சல்யூட் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது.