பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழா ராக் இசை கச்சேரி, ஆடல் பாடல் கொண்டாட்டங்களுடன் முடிவடைந்தது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கியது. 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என 6 பதக்கங்களை வென்றது.
இதனிடையே, ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது. நிறைவு விழாவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் உரையாற்றினார். அமெரிக்க வீரர்களின் நடன நிகழ்ச்சியும், பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் பாடகர்களின இசை கச்சேரியும் ஒலிம்பிக் விழாவில் களைகட்டின.
இந்த நிகழ்ச்சியை ஏராளமான வீரர், வீராங்கனைகள் கண்டு ரசித்தனர். இதனை தொடர்ந்து, ஒலிம்பிக் சுடர் அணைக்கப்பட்ட நிலையில், வாணவேடிக்கைகளுடன் பாரிஸ் ஒலிம்பிக் விழா நிறைவு பெற்றது.