பீகாரில் கோயிலில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல் காரணமாக 7 பேர் உயிரிழந்தனர்.
மக்தூம்பூர் வானவார் பாபா சித்தேஷ்வர் நாத் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு அங்கு ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதன் காரணமாக கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மக்தும்பூர் மற்றும் ஜெகனாபாத் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.