நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் பகுதியில் தமீம் என்பவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து அப்பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடபெற்றது.
கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே தமீம் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், வியாபாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.