சேலம் அருகே பாலம் கட்டும் பணிக்காக வாகனங்களை திருப்பி விட்ட காவல் உதவி ஆய்வாளருடன் வாகன ஓட்டிகள் தகராறில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம், அரியானூர் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருவதால், அந்த பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாற்று வழியில் செல்லாமல் வழக்கமான வழியில் வந்த வாகனங்களை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பச்சையப்பன் தடுத்து நிறுத்தினார்.
அப்போது, காரில் வந்தவர்கள் வழிவிடுமாறு உதவி ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.