வங்கசேதத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து தஞ்சையில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மாநில இணை செயலாளர் செந்தில் முருகன் தீர்மானங்கள் குறித்து எடுத்துரைத்தார், அதில் கூட்டத்தின் வங்கதேச ஹிந்துக்களை இந்திய அரசு பாதுக்காக்க வேண்டும் எனவும், கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களின் சிரமத்தை குறைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் தெரிவித்தார்.
மேலும் போதையில்லா தமிழகத்தை உருவாக்க , மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு வகுப்புகள் நடட வேண்டும் உள்ளிட்ட 8 முக்கிய தீர்மானங்கள் செயற்குழுக் கூட்டம் மூலம் நிறைவேற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.