ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பேருந்தால் பயணிகள் அவதியடைந்தனர்.
தொண்டி நோக்கி சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று நால்ரோடு நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதையறிந்த தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் பேருந்தை பின் தொடர்ந்து சென்றார். இதுகுறித்து ஓட்டுநரிடம் கேட்டபோது அவர் பதிலளிக்காமல் இருந்துள்ளார்.
இந்த சம்பவம் பயணிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.