நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த 2 மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேளாங்கண்ணியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 45 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து வேளாங்கண்ணிக்கு சென்ற மாணவர்கள் கடலில் குளித்துள்ளனர். அப்போது இரண்டு மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.