சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில், சுந்தரமூர்த்தி நாயன்மார் திருநட்சத்திர நிகழ்வு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுந்தரமூர்த்தி நாயனார் , சங்கிலி நாச்சியார் வெள்ளை யானை வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
நான்கு மாட வீதிகளிலும் 108 சங்க நாதங்கள் முழங்க சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.