சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குடியிருப்பு நல சங்கத்தில் தேசியக்கொடி ஏற்றுவதை முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதற்கு எதிராக வழக்கு தொடர இருப்பதாகவும், அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
மேலும், தேசியக்கொடி ஏற்ற போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என குடியிருப்பு நல சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், தேசியக் கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம் என கண்டனம் தெரிவித்தார். கொடி ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது எனக்கூறிய நீதிபதி, தடுப்போர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடரலாம் என குறிப்பிட்டார்.