வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியை தடை செய்யும் எண்ணம் இல்லை என இடைக்கால அரசின் உள்துறை ஆலோசகர் ஜெனரல் ஷெகாவத் உசைன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்துக்களை பாதுகாக்க தவறியதாக அவர் மன்னிப்பு கேட்டார்.
சிறுபான்மையினரான இந்துக்களை பாதுகாப்பது பெரும்பான்மையினரான இஸ்லாமியர்களின் கடமை என்றும், அந்த கடமையில் இருந்து தவறியதற்காக தான் மன்னிப்பு கேட்பதாகவும் ஷெகாவத் உசைன் கூறியுள்ளார்.