நீலகிரியில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி, யானைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், பாகன்களின் கட்டளைகளை ஏற்று கும்கி யானைகள் சாகசங்களை தத்ரூபமாக செய்து காட்டியது. இந்தநிகழ்வு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.