இயற்கை பேரிடர் குறித்த செய்திகளை ஒளிபரப்பும்போது தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட வேண்டுமென செய்தி தொலைக்காட்சிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், இயற்கை பேரிடர், ரயில் விபத்து போன்ற சம்பவங்கள் குறித்து செய்தி வெளியிடும்போது மக்களுக்கு குழப்பம் ஏதும் ஏற்படுத்தாத வகையில், நிகழ்வு நடந்த தேதி மற்றும் நேரத்தை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.