வீட்டுவசதி திட்ட ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் உளவுத் துறை தலைவரை ராணுவம் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
பாகிஸ்தான் முன்னாள் உளவுத் துறை தலைவரான ஃபைஸ் ஹமீது, வீட்டுவசதி திட்ட ஊழலில் சிக்கினார். இதனால் அவர் மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ஃபைஸ் ஹமீது மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதால், அவரை ராணுவம் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. பாகிஸ்தானில் உளவுத் துறை தலைமைப் பொறுப்பை வகித்த ஒருவர், ஊழல் வழக்கில் ராணுவ விசாரணையை எதிர்கொள்வது இதுவே முதல்முறை என தகவல் வெளியாகியுள்ளது.