யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே 4-ம் தேதி சவுக்கு சங்கர் தேனி பூதிப்புரம் சாலையில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். அப்போது போலீஸார் அவரது கார் மற்றும் விடுதி அறையை சோதனை செய்தபோது கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பழனிசெட்டிபட்டி போலீஸார் சவுக்கு சங்கர் உள்பட மூவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் பேரில், ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
முன்னதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து வதந்தி பரப்பியதாக சவுக்கு சங்கர் மீது பதிவு செயப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.