நீலகிரி மாவட்டம், மாயார் வனப்பகுதியில் தாயைப் பிரிந்த குட்டி யானையை 26 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் வனத்துறையினர் தாயுடன் சேர்த்து வைத்துள்ளனர்.
மசினகுடி அடுத்துள்ள மாயார் வனப்பகுதியில் குட்டியானை ஒன்று தாயைப் பிரிந்து தனியாக சுற்றித் திரிந்தது.
இதனை அவ்வழியாக சென்றவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், தற்போது நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் குட்டி யானையை தாயுடன் சேர்த்து வைத்துள்ளனர்.
மேலும், அப்பகுதியில் சுற்றித்திரியும் யானை கூட்டத்தையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.