சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அதிகாலையில் கனரகலாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
செங்குன்றத்திலிருந்து பால் சீலிங் ஏற்றிக் கொண்டு சென்னை வந்த கனரக லாரி ஒன்று அண்ணா மேம்பாலத்தின் கீழே வளைவில் திரும்பிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மோதி கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டது.
விபத்து குறித்து தகவலறிந்த பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கனரக லாரியை அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.