சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில், இந்த படத்தை கூழாங்கல் படத்தின் இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியுள்ளார். இதில் சூரியுடன் இணைந்து அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதேசமயம் இந்த படமானது ரிலீஸுக்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடம் பாராட்டுகளை பெற்றது. தற்போது கொட்டுக்காளி படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.