கல்கி 2898 ஏடி படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்த படம் கடந்த ஜூன் 27ஆம்தேதி வெளியானது. ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வரும் 23ம் தேதி கல்கி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் இதுவரை உலகமெங்கும் ஆயிரத்து 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.