RCB அணியின் விலையும் எகிறியது : ரூ.16,000 கோடிக்கு "NO" சொன்ன ராஜஸ்தான் ராயல்ஸ் - சிறப்பு கட்டுரை!
Sep 20, 2026, 08:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

RCB அணியின் விலையும் எகிறியது : ரூ.16,000 கோடிக்கு “NO” சொன்ன ராஜஸ்தான் ராயல்ஸ் – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 22, 2026, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நெருங்கி வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒரு நிறுவனம் வாங்க முன்வந்த நிலையில், அதனை அணிநிர்வாகம் நிராகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்கான காரணம் என்ன தற்போது பார்க்கலாம்…

ஐபிஎல்லின் 10 அணிகளில் ஒன்றான, நடப்புச் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அணிகளை விற்பதாக அறிவித்தன..

19வது ஐபிஎல் தொடர் மார்ச் 28ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 16 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்க அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான CPCP முன்வந்தது… இரண்டு வார காலத்திற்குள் 16 ஆயிரம் கோடி ரூபாயையும் செலுத்துவதாகவும் உறுதியளித்திருந்தது.

. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியோ அந்த சலுகையை திடீரென நிராகரித்துவிட்டது… தங்கள் அணியை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அணியின் பங்குகள் பரந்த அளவிலான சந்தை மதிப்பை பெற்று வரும் நிலையில், அணி நிர்வாகம் உயர் மதிப்பீட்டை பெறுவதற்கான தெளிவான நோக்கத்தை கொண்டிருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிராகரிப்பு முடிவானது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அதிக மதிப்புள்ள அணிகளின் வரிசையில் சேர்த்திருப்பதோடு, சந்தையின் எதிர்பார்ப்புகளையும் மாற்றியமைத்துள்ளது.
65% பங்குகளைக் கொண்டுள்ள மனோஜ் படாலேயின் எமர்ஜிங் மீடியா வென்ச்சர்ஸ் மற்றும் ரெட் பேர்ட் கேப்பிட்டல் போன்ற சிறு முதலீட்டாளர்களால் வழிநடத்தப்படும் இந்த அணி, ஒரு பிரீமியம் சலுகைக்காகக் காத்திருக்கத் தயாராக உள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முடிவு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஏலத்தொகையையும் உயர்த்தியுள்ளதாகவே நம்பப்படுகிறது. சந்தை மதிப்பீடுகளின்படி, ஆர்சிபியின் வலுவான பிராண்ட், வணிக ரீதியிலான ஈர்ப்பு ஆகியவற்றை கணக்கில் கொள்ளும்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வட 15 சதவிகிதம் கூடுதல் தொகையை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மணிபால் மருத்துவமனைகளின் நிறுவனர் டாக்டர் ரஞ்சன் பாய் தலைமையிலான கூட்டமைப்பு, அமெரிக்கபங்கு நிறுவனமான கேகேஆர் மற்றும் சிங்கப்பூரின் டெமாசெக் ஆகியவற்றுடன் இணைந்து, ஆர்.சி.பி-யில் பங்குகளைக் கையகப்படுத்துவதில் மும்முரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் உலகின் இரண்டாவது அதிக மதிப்புள்ள விளையாட்டு லீக்காகத் திகழ்கிறது. தற்போதைய நிலவரப்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே நிலைமையை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஒரு கணிசமான ஏலத்தை நிராகரித்ததன் மூலம், தங்களின் மதிப்பீட்டு வரம்பை உயர்த்தியது மட்டுமல்லாமல், இணை ஒப்பந்தங்களின் போக்கையும், குறிப்பாக ஆர்.சி.பி.யின் மதிப்பையும் உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ipl 2026 newsipl 2026 dateipl 2026 squadipl 2026 sqaudipl 2026 teamsRajasthan RoyalsIPL 20262026 iplipl 2026 rcbrcb ipl 2026
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லி என்றாலே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடுக்கம் – நயினார் நாகேந்திரன்

Next Post

விஜில் அமைப்பு சார்பில், தமிழ் பண்பாட்டை உயிர்ப்பிக்கும் பண்ணிசை பெருவிழா

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies