இஸ்ரேலின் தொடர் தாக்குதல் காரணமாக இடம்பெயர்ந்த காசா மக்கள் முறையான அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதுவரை 40 ஆயிரம் பாலஸ்தீனர்கள் உயிரிழந்தாக கூறப்படுகிறது.
இஸ்ரேலின் தொடர் தாக்குதலையடுத்து காசா பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், கூடாரம் அமைத்து தங்கியுள்ளவர்கள் உணவு, மின்சாரம் இன்றி அவதிக்குள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.
















