ஒடிடி மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடகங்களை நெறிமுறைக்குள் கொண்டுவரும் புதிய ஒலிபரப்பு சேவைகள் மசோதா வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் இயங்கி வரும் சுயாதீன கண்டன்ட் கிரியேட்டர்களின் வரம்புகளை நிர்ணயிக்கும் வகையில் அவர்களை, ஒடிடி மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடகங்களின் நெறிமுறைக்குள் கொண்டுவரவும், அவர்களது கருத்துக்களை வெளியிடுவதற்கு முன் அதைத் தணிக்கை செய்து சான்றளிக்கும் குழுவை அமைக்கும் வகையிலும் மத்திய அரசானது புதிய ஒலிபரப்பு சேவைகள் மசோதாவைக் கொண்டுவந்தது.
இது தொடர்பாக கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற்றுள்ளது. இதற்கு பதிலாக சம்பந்தப்பட்டவர்களிடம் ஆலோசனை செய்து புதிய வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.