மோசமான அதிபர் ஜோ பைடன்! போலியான நபர் கமலா ஹாரிஸ்! - டிரம்ப் அதிரடி விமர்சனம்!
Aug 24, 2025, 05:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோசமான அதிபர் ஜோ பைடன்! போலியான நபர் கமலா ஹாரிஸ்! – டிரம்ப் அதிரடி விமர்சனம்!

Web Desk by Web Desk
Aug 13, 2024, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் மிக மோசமான அதிபர் ஜோ பைடன் தான் என்றும், அமெரிக்க துணை அதிபரும், தற்போதைய ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ் ஒரு போலியான நபர் என்றும் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டி இருக்கிறார். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி வெளிவந்த கருத்துக் கணிப்பின்படி, அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் 42 சதவீத மக்கள் செல்வாக்குடன் முன்னிலை வகிப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த சூழலில் தான், அமெரிக்காவின் முன்னாள் அதிபரும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப், தமது எக்ஸ் தள ஸ்பேசஸில், அதன் நிறுவனர் எலான் மஸ்க் உடன் நேரடி நேர்காணலில் பங்கேற்றார்.

கடந்த திங்கள் கிழமை இந்திய நேரப்படி அதிகாலை 5 மணியளவில் நடைபெற இருந்த நேரலை தொழில்நுட்ப கோளாறு காரணமாக 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கப் பட்டது.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த நேர்காணலில் தனது இரண்டாவது ஆட்சி காலத்தில் என்னென்ன புதிய திட்டங்கள் வர உள்ளன என்பது பற்றி கோடிட்டு காட்டியிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்.

தம் மீது அண்மையில் நடத்தப்பட்ட படுகொலை முயற்சி, அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேற்றம் மற்றும் அரசு ஒழுங்குமுறைகளை குறைக்கும் தனது திட்டங்கள் குறித்தும் டொனால்ட் ட்ரம்ப் விரிவாக தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கேலி செய்த டொனால்ட் ட்ரம்ப் , தன்னுடனான நேரடி விவாதத்தில் ஜோ பைடன் மிக மோசமாக தோல்வியடைந்ததாக கிண்டலாக கூறி இருந்தார். மேலும் அதிபர் போட்டியில் இருந்து ஜோ பைடன் வெளியேறியதற்கு ஜனநாயக கட்சியினரின் சதியே காரணம் என்றும் ட்ரம்ப் கூறினார்.

அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர் ஜோ பைடன் தான் என்று கூறிய டொனால்ட் ட்ரம்ப், ஈரான்-இஸ்ரேல் நெருக்கடி, ஆப்கானிஸ்தான் பிரச்சினை, பெட்ரோல் விலை உயர்வு, தனிநபர் வருமானம் குறைந்தது என ஜோ பைடனின் நிர்வாக தோல்விக்கான காரணங்களையும் பட்டியலிட்டார்.

அமெரிக்க எல்லையைத் தாண்டி சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டிய டொனால்ட் ட்ரம்ப், தன்னை எதிர்த்து போட்டியிடும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போலியான மனிதர் என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

தாம் செய்யும் அனைத்தையும் கமலா ஹாரிஸ் செய்வதாக கூறிய டொனால்ட் ட்ரம்ப், இந்த எக்ஸ் தள நேரலை நேர்காணல் மூலம் தனது பிரச்சாரத்தை அதிக மக்களை சென்ற சேர வழி செய்திருக்கிறார்.

எக்ஸ் தளத்தின் ஸ்பேசஸில் நேரலையில் நடைபெற்ற இந்த உரையாடலை, உலகம் முழுவதிலும் பல லட்சம் பேர் கேட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

இதற்கிடையே, டொனால்ட் ட்ரம்புடனான தனது நேர்காணலை ஒளிபரப்புவதன் மூலம் “தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை பரப்பியதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் உள் சந்தைக்கான ஆணையரான Breton, எலான் மஸ்க்கை எச்சரித்திருக்கிறார்.

தவறான தகவல் உட்பட பல சிக்கல்களைத் தீர்ப்பதற்காக 2022 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட டிஜிட்டல் சேவைகள் சட்டம் உட்பட ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்துமாறு Breton, மஸ்க்கை வலியுறுத்தி தனது எக்ஸ் தளத்தில் எச்சரிக்கை கடிதத்தை பதிவிட்டிருக்கிறார்.

இந்நிலையில், டொனால்ட் ட்ரம்பின் பிரச்சார செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங், அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடாமல் தங்கள் சொந்த விஷயத்தில் கவனம் செலுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பதில் அளித்திருக்கிறார்.

2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு எதிரான கருத்து தாக்குதலைத் தூண்டிவிட்டு, அதன் மதிப்பைக் குறைக்க தவறான தகவல்களைப் பரப்பியதற்காக எக்ஸ் தளத்திலிருந்து டொனால்ட் ட்ரம்ப் நிரந்தரமாக நீக்கப்பட்டார். தற்போது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு எக்ஸ் தளத்தில் அதன் நிறுவனருடன் நேர்காணலில் பங்கேற்றிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப் .

இது அமெரிக்க அரசியல் களத்தில் ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது.

Tags: Bad President Joe Biden! Fake Person Kamala Harris! - Trump Action Review!
ShareTweetSendShare
Previous Post

வெளிநாட்டினர் வெளியேற்றம்! : ட்ரம்பின் முடிவால் கமலாவுக்கு ஆதரவு?

Next Post

மார்ட்டின் தீவு தான் காரணமா? : அமெரிக்கா மீது ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு!

Related News

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி!

அமெரிக்காவை அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லும் இந்தியா மீதான வரிவிதிப்பு : எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள் – சிறப்பு தொகுப்பு !

சட்டவிரோத சூதாட்டம், காங். எம்எல்ஏ கைது : அமலாக்கத்துறை சோதனையில் அள்ள அள்ள பணம் – சிறப்பு தொகுப்பு!

இபிஎஸ் தான் என்டிஏ கூட்டணி முதல்வர் வேட்பாளர் – நயினார் நாகேந்திரன் உறுதி!

புற்று நோயாளிகளுக்கு GOOD NEWS : நம்பிக்கை தரும் தடுப்பூசி – சிறப்பு தொகுப்பு!

பழனி அருகே தேனீர் அருந்திக்கொண்டிருந்தவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

திருமணம் செய்து கொள்ள காதலன் மறுப்பு : 7-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் சோதனை வெற்றி!

திருத்தணி அருகே மின்சாரம் தாக்கியவர் மருத்துவமனையில் அனுமதி – பழுதை சரி செய்ய மின்மாற்றியில் ஏறியபோது நிகழ்ந்த சோகம்!

காரைக்குடி அருகே வணிகர் சங்கத்தின் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

கூடலுார் பகுதியில் சாமந்தி பூ விளைச்சல் சரிவு – விவசாயிகள் கவலை!

உலக விண்வெளி சக்திகளிடையே உயர்ந்து நிற்கும் இந்தியாவிற்கு ககன்யான் திட்டம் சான்று – ராஜ்நாத் சிங் பெருமிதம்!

மழை வருது… மழை வருது… குடை கொண்டு வா – அரசுப்பேருந்தின் அவலம்!

ஊழியரை மதுபோதையில் தாக்கியதாக குற்றச்சாட்டு – கோவிலம்பாக்கம் ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்!

கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியின் சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்திய காட்டு யானை!

மசினகுடி அருகே உடல் மெலிந்த நிலையில் சுற்றித் திரியும் புலி – தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies