பயிற்சி பெண் மருத்துவர் கொலையை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார்.
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு வரவேற்பு தெரிவித்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மேற்கு வங்கத்தில் சட்டம்- ஒழுங்கு நிலவரம் கேள்விக்குறியாகி இருப்பதாக விமர்சித்தார்.
அம்மாநிலத்தில் பெண் ஒருவர் முதல்வராக பதவி வகிக்கிற போதிலும், மகளிருக்கு எதிரான குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஜெ.பி.நட்டா வேதனை தெரிவித்தார்.
மேலும், பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கை மூடிமறைக்க மேற்கு வங்க அரசு முயற்சித்ததாக குற்றம்சாட்டிய அவர், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை தாம் வரவேற்பதாக தெரிவித்தார்.
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என ஜெ.பி.நட்டா உறுதியளித்தார்.