தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சங்கத்தில் மேலாளாராக பணிபுரிந்த ஸ்ரீதரன் என்பவர் தனியாக இருந்த போது கம்ப்யூட்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் புகைமூட்டம் ஏற்பட்டு ஸ்ரீதரன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.