மயிலாடுதுறை அருகே வேப்பமரத்தில் இருந்து நுரை பொங்கியபடி பால் வடிந்ததால் பொதுமக்கள் ஒன்று கூடி சாமி தரிசனம் செய்தனர்.
பல்லவராயன்பேட்டை கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் இடத்தில், நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் பெண்கள் வேலை செய்துக்கொண்டிருந்தனர். அப்போது தோட்டத்தில் உள்ள வேப்பமரம் ஒன்றில் இருந்து நுரை பொங்க பால் வடிந்தது.
இதைக்கண்ட பெண்கள் மற்றும் அப்பகுதி மக்கள் வேப்பமரத்தில் அம்மன் இருப்பதாகக் கூறி மஞ்சள், குங்குமம் உள்ளிட்டப் பொருட்கள் கொண்டு பூஜை நடத்தினர்.
இந்த சம்பவம் அப்பகுதி முழுக்க பரவியதை அடுத்து ஏராளமான மக்கள் மரத்தை பார்வையிட்டு சென்றனர். இதனைத்தொடர்ந்து இந்த இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என அங்குள்ள மூதாட்டி ஒருவர் அருள்வாக்கு கூறியுள்ளார்.