தமிழக சூழ்நிலைக்கு உகந்த 10 கலப்பின பயிர் ரகங்களை மத்திய வேளாண்மை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி தொடங்கி வைத்த 109 செறிவூட்டப்பட்ட கலப்பின பயிர்களில் 10-க்கும் மேற்பட்ட பயிர்கள் தமிழகத்தோடு தொடர்புடையவை என மத்திய வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.
அதில், சி.எஸ்.ஆர்-101, கே.கே.எல் ஆகிய நெல் ரகங்கள் முதல்நிலை பரிந்துரையாக செய்யப்பட்டுள்ளது, இதில் சி.எஸ்.ஆர் 101- என்ற ரகம் ஹெக்டேருக்கு 35.15 குவிண்டால் விளைச்சல் தரக்கூடியது எனவும், கே.கே.எல் ரகம் ஹெக்டேருக்கு 56 குவிண்டால் விளைச்சல் தரக்கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல 4 ரக சோள வகைகளும், ஒரு சிறுதானிய வகையும், தன்ஜீலா எள், ஜே.பி.எம் என்ற கால்நடை தீவனமும் தமிழ்நாட்டுக்கு உகந்தவை என மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து அர்காகிரன் என்ற கொய்யா ரகம், கேரளா ஸ்ரீ என்ற வாசனை ரகம், கோகோ என்ற தோட்டப்பயிர் வகைகளும் அந்த பரிந்துரையில் அடங்கியுள்ளது.
கல்ப சதாப்தி என்ற தென்னை ரகம், அர்காவைபவ் என்ற சம்பங்கி பூ வகை உள்ளிட்டவை தமிழ்நாட்டுக்கு பரிந்துரை செய்யப்படுவதாக மத்திய வேளாண்மைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.