தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட் குழுவினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
அப்போது பாதுகாப்பு படையினரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் நக்சலைட்டுகள் அங்கிருந்து தப்பியோடினர்.
இதனையடுத்து அந்த பகுதியில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள், வெடி மருந்துகள், 38 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.