பிரிவினையின் கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பிரிவினையால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற மக்களை நினைவு கூர்வோம் என்றும், நமது தேசத்தின் ஒற்றுமை, சகோதரத்துவத்தின் பிணைப்பை எப்போதும் பாதுகாக்க உறுதியேற்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.