பிரிவினையின் கொடுமைகளை சகித்து கொண்டு எதிர்காலத்தை நோக்கி பயணித்த மக்களின் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்துவோமென மத்திய அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.
இருண்ட காலத்தில் உயிரிழந்தவர்களுக்கும், உடைமைகளை இழந்தவர்களுக்கும் மரியாதை செலுத்துவோம் எனவும் அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாட்டில் அமைதியையும், ஒற்றுமையையும் நிலைநிறுத்த பிரிவினை கொடுமைகள் நினைவு தினத்தில் உறுதி ஏற்போம் எனவும் தெரிவித்துள்ளார்.