திருச்சி விமான நிலையத்தில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் சிக்கியது.
கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பெண் பயணியின் உடமைகளை சோதித்தபோது அவரிடம் 2 புள்ளி 2 கிலோ கடத்தல் தங்கம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பெண் பயணியை கைது செய்த அதிகாரிகள் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.