தமிழக காவலர்கள் 23 பேருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 78ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, மிகச் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான குடியரசு தலைவர் விருது தமிழகத்தில் 2 பேருக்கும், மெச்சத்தக்க சேவைக்கான விருது 21 காவலர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஜி கண்ணன், ஐஜி பாபு ஆகியோர் விருது பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.