தஞ்சாவூர் அருகே இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த இளம் பெண் வெளியூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சில தினங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்த பெண்ணை, இளைஞர்கள் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நான்கு பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.