விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கணினி உதிரி பாகங்கள் விற்பனை கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
குமரன் புது தெருவை சேர்ந்த ராஜ்குமார் என்பவர், விருதுநகர் சாலையில் கணினி உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
வழக்கம் போல் கடையை திறப்பதற்காக வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு 32 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.