செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதியதில் 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பிரியேன் – ஜானகி தம்பதியினருக்கு 2 வயதில் ஸ்கைலா என்ற பெண் குழந்தை இருந்தது.
இந்த நிலையில் பள்ளி வாகனத்தில் வீடு திரும்பிய மூத்த மகனான ஜோயலை அழைக்க தாய் ஜானகி சென்றுள்ளார். அப்போது தாயுடன் வந்த மகள் ஸ்கைலா, பள்ளி வாகனத்தின் பின்புறத்தில் நின்றுள்ளார்.
இதனை அறியாத ஓட்டுநர், வாகனத்தை இயக்கியதில் குழந்தை வாகனத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடலை கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.