தேனி மாவட்டம், கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 3ஆவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்புக் கருதி அருவியில் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.