ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 19 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால் நீர் வரத்து சரிந்துள்ளது.
அந்தவகையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து 19 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதையடுத்து பரிசல் இயக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்கிறது.