சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி பிரம்மாண்ட விளக்கு பூஜை நடைபெற்றது.
உற்சவ சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்குகளால் அம்மனுக்கு விளக்கு பூஜை நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.