மயிலாடுதுறையில் தனியார் கல்லூரி மாணவனை தாக்கும் சக மாணவரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மடவிளாகம் பகுதியில் தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் வீடியோ கால் மூலம் நண்பரை தொடர்புகொண்டு அவரிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறி சக மாணவரை தாக்குகிறார்.
அவருடன் சேர்ந்து மேலும் இரு இளைஞர்கள் அந்த மாணவரை தாக்குகின்றனர். இதனை ஒரு இளைஞர் வீடியோவாக பதிவு செய்த நிலையில் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.