ஆந்திராவில் இருந்து கன்னியாகுமரிக்கு கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவில் இருந்து டெம்போ வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்ததாக தனிப்பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் நாங்குநேரி சுங்க சாவடியில் சோதனையில் ஈடுபட்ட போலீசார் அந்த வழியாக வந்த டெம்போ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் 3 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து டென்னீஸ் மற்றும் பிரான்சிஸ் நெல்சன் ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனர்.