புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வகுப்பறை மேற்கூரை காரை பெயர்ந்து விழுந்தது.
கட்டிடம் கட்டி 25 ஆண்டுகளுக்கு மேலாகி உள்ளதால் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக அப்பகுதியினர் கூறியுள்ளனர். இருப்பினும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென குற்றம் சாட்டு எழுந்துள்ள நிலையில், புதிய பள்ளி கட்டிடம் கட்டி தருமாறு கோரிக்கை எழுந்துள்ளது.