திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவரான கார்த்திக் குமாரை தன்பாலினத்தவர் என குறிப்பிட்டதற்காக, பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
இது தொடர்பாக, தனது யூடியூப் சேனலான Suchi’s Space-ல் அவர் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். சென்னை பட்டினம்பாக்கம் காவல்துறையின் அறிவுறுத்தலின்பேரில், தான் இந்த வீடியோவை வெளியிடுவதாகவும், மேலும் கார்த்திக் குமாருக்கு மின்னஞ்சல் மூலம் தனது மன்னிப்பு கடிதத்தை அனுப்பவுள்ளதாகவும், சுசித்ரா கூறியுள்ளார்.